இறவாப் படைப்புகளை கொடுத்ததால்,
இசை இறைவனுக்கே சொந்தமாதலால்,
இரும்பும் இவர் இசையில் இசைவதால்,
இமைப்பது போல் இசைப்பது இவரியல்பு ஆதலால்,
இனியவை பெருக்கி இன்னாதவை விலக்குவதால்,
இசையால் இவர் இருப்பு நிரந்தரமாதலால்,
இரைச்சல் வாழ்வின் அமைதி இவரிசை ஆதலால்,
இரவின் ஒளி இவரது ஒலி ஆதலால்,
இயல்பு மாறாமல் இனமனைத்திலும் சேர்வதால்,
இவ்வுலகில் இந்திரன் சொர்க்க இசை படைப்பதால்,
இறையச்சம் உள்ளோருக்கும் இறைவனை எள்ளுவோருக்கும் இவரிசை பொதுவாததலால்,
இறப்பு வரை துணை வரும் இவர் பாடலால்,
-இவர் இறைவன்!இளையராஜா என் தலைவன்!
-பெ. கு. செந்தில்குமரன்
-பெ. கு. செந்தில்குமரன்
No comments:
Post a Comment